பதிவு செய்த நாள்
03
அக்
2022
12:10
வாலாஜாபாத் : காஞ்சிபுரம் அடுத்த, அருந்ததியர்பாளையம் கிராமத்தில், ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் உள்ளது.இக்கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசி மாத, இரண்டாவது சனிக்கிழமை அன்று, திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.நேற்று முன் தினம் திருக்கல்யாண வைபவ உற்சவத்தை முன்னிட்டு, இரவு 7:00 மணி அளவில் முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து, மங்கள வாத்தியம் முழங்க, கல்யாண சீர்வரிசை கிருஷ்ணர் கோவிலை வந்தடைந்தன.அதை தொடர்ந்து, ராதா, ருக்மணிக்கு கிருஷ்ணருக்கு திருக்கல்யாண உற்சவத்தை, சிவாச்சாரியார் நடத்தினார். அதை தொடர்ந்து, ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் புதுமனை தம்பதியராக மணக்கோலத்தில், எழுந்தருளி வீதியுலா வந்தனர். கிராம மக்கள் தீபாரதனை செய்து வழிபட்டனர்.