காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில், நேற்று, தேசிய ஹிந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன் வாயிலாக உழவாரப் பணி நடந்தது.இந்த அமைப்பு, சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. பிற மாவட்டங்களிலும் கிளை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. நேற்று, 900 பேர் இந்த உழவாரப் பணிகளில் பங்கேற்றனர்.இந்த அமைப்பின் தேசிய செயலர் சுரேஷ் முன்னிலையில் இந்த பணி நடந்து வருகிறது.இந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடந்த உழவாரப் பணியில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் இருந்து 900 பேர் பங்கேற்றனர்.இந்த பணி 111வது உழவாரப் பணியாகும். திருவண்ணாமலையில் நடந்த உழவாரப் பணியின் போது 2,000 பேர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு தகவல் சொன்னால் போதும், எந்த ஊரில் உழவாரப் பணி நடக்கிறது என்று கேட்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்வர்.இவ்வாறு அவர் கூறினார்.