மைசூரு : உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. கர்நாடகாவில் மன்னர் ஆட்சி காலத்திலிருந்து மைசூரில் வெகு விமரிசையாக தசரா விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் விழா நாளை கோலாகலமாக துவங்குகிறது. விழாவை முன்னிட்டு இரவில் மின் விளக்கில் மைசூரு அரண்மனை தங்கம் போன்று ஜொலித்தது. மேலும் நகரின் பல பகுதிகளில் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.