பதிவு செய்த நாள்
08
அக்
2022
05:10
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி புதூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 28 ம் தேதி நடக்கிறது. கருமத்தம்பட்டி, கருமத்தம்பட்டி புதூர் சித்தி விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள் பழமையானவை. இக்கோவில்களை புதிதாக நிர்மாணிக்க ஊர் மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து பாலாலயம் செய்யப்பட்டு, கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் கட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து, கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி நடக்கிறது. நேற்று காலை, யாகசாலை அமைக்க, முகூர்த்தக்கால் நடப்பட்டது. கோவில் கமிட்டியினர், ஊர் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழாவானது, வரும், அக்., 25 ம்தேதி காலை துவங்குகிறது. நான்கு கால ஹோமங்கள் முடிந்து, அக்., 28 ம்தேதி காலை, 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.