பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி 3 வது சனி வார விழா சிறப்பாக நடந்தது.
பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயிலில் புனிதப்புளி ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் வடை மாலை சாற்றி வழிபட்டனர். பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் மூலவர் திருப்பதி அலங்கார சேவையில் அருள் பாலித்தார். பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உற்சவர் பெருமாள் மற்றும் சவுந்தரவல்லி தாயார் சீதாராமர் திருக்கோலத்தில் அன்ன வாகனத்தில் அருள்பாலித்தனர். எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் மூலவர் திருப்பதி அலங்கார சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நேற்று காலை முதல் பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர். இரவு 10:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நிறைவடைந்து, பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.