பழநியில் கந்த சஷ்டி விழா தங்கும் கூடங்கள் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2022 03:10
பழநி: பழநியில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் இருக்க பக்தர்களுக்கு இலவச தங்கும் கூடங்களை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழநி மலைக்கோயிலில் அக்.25., அன்று உச்சிக்கால பூஜைக்கு பின் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கும். அக்., 30, அன்று கிரிவிதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி மாலையில் நடைபெறும். அக்.,31 அன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். கந்த சஷ்டி விழாவில் திருக்கோயில் சார்ந்த இடங்களில் தங்கி பக்தர்கள் விரதம் இருக்க கோயில் நிர்வாகம் தங்கும் கூடங்களை அறிவித்துள்ளது. பழநி கோயில் நிர்வாகத்தின் சார்பில் கந்த சஷ்டி விழாவிற்கு இலவச தங்கும் கூடங்களை முதன்முறையாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கிழக்கு கிரிவிதி நீரேற்று நிலையம் எதிரில் உள்ள பழைய நாதஸ்வர கல்லூரி தங்கும் கூடம், மேற்கு கிரி வீதி வின்ச் ஸ்டேஷன் எதிரில் உள்ள சின்னகுமாரர்விடுதி வளாகத்தில் பக்தர்கள் பயன்படுத்த கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தங்கும் கூடங்கள் குறித்து அறிய: கண்காணிப்பாளர் தொலைபேசி எண்கள்: 80725 88310, 85081 35493. தலைமை அலுவலக தகவல் மையம்: 04545-242236, 240293, 241293 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கோயில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.