வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே தெத்துரரில் சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 2ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து மண்டல சாந்தி, கோ பூஜை நடந்தன. சிவாச்சாரியார் வேத மந்திரம் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.