மடப்புரம் காளி கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லை நடிகர் குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2022 05:11
திருப்புவனம்: கனவில் தோன்றி காளி அழைத்ததால் மடப்புரம் வந்தேன் " என நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்தார். தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார நாட்களான செவ்வாய், வெள்ளி, ஞாயிறுகளில் பெண்கள் கூட்டம் அலைமோதும். நேற்று சினிமா நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு மடப்புரம் காளியை தரிசனம் செய்த பின் கூறும்போது: எனது கனவில் காளி வந்து தாகமாக உள்ளது. குடிக்க தண்ணீர் வேண்டும் என அழைத்தார். அம்மனை வழிபட்ட பின்,கோயிலை வலம் வந்தேன் குடிதண்ணீர் வசதியே இல்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு வீல்சேர் இருந்தும் பழுதாகி உள்ளது. பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. எனவே தமிழக முதல்வரும், இந்து அறநிலையத் துறை அமைச்சரும் பக்தர்களுக்கு குடி நீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், என்றார்.நடிகர் கஞ்சாகருப்பு உடன் பா.ஜ.,மாநில செயலாளர் பொருளாதார பிரிவு பால சித்தர், பா.ஜ.,நிர்வாகிகள் முருகன், கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.