Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளக்கிணறு கன்னிமார் கோவில் ... கோயில் நிலத்தை மீட்க அதிகாரிகள் ஒத்துழைக்காவிடில் சிறை தான் கோயில் நிலத்தை மீட்க அதிகாரிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேஷம்: கார்த்திகை மாத பலன்
எழுத்தின் அளவு:
மேஷம்: கார்த்திகை மாத பலன்

பதிவு செய்த நாள்

16 நவ
2022
08:11

அசுவினி
வாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய உங்களுக்கு இந்த மாதம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும்.  கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை  கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்னைகள் குறையும். எதிர்பார்த்த பண  உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பணியாளர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு  நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். பெண்கள் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய  முற்படுவர். கலைத்துறையினருக்கு பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்ற சந்தேகம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பு உண்டாகலாம்.  அரசியல்வாதிகளுக்கு  நிலவி வந்த பிரச்னைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும்.  உற்சாகமாக படிப்பர். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
பரிகாரம்: சிவனை வழிபட்டால் வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: நவ. 22, 23
அதிர்ஷ்ட நாள்: டிச. 2

பரணி:
அசத்தலான நடை உடை பாவனையுடன் ஆடம்பரமாக வாழும் உங்களுக்கு இந்த மாதம் புத்தி சாதுாரியமும் அறிவுத்திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம்  ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள்  அவசர முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். பணியாளர்கள் அதிகாரிகள் கூறுவதை  கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை துாண்டலாம். எனவே வீண்  வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த  பழைய பகைகள் மாறும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு அவசர முடிவுகளை தவிர்ப்பது  நன்மை தரும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு  தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீதுர்கை வழிபாடு பிரச்னை தீரும்.
சந்திராஷ்டமம்: நவ. 23, 24
அதிர்ஷ்ட நாள்: டிச. 3

கார்த்திகை  1
நியாயமான திட்டங்களுக்கு ஆதரவு அளித்து அடுத்தவர் மதிப்பை பெறும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நட்சத்திரநாதன் சூரியன் சஞ்சாரத்தால் ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும்  வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை  இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு  எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு  கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டு பேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.  அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி  பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் உண்டாகும். அரசியல்துறையினருக்கு முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். காரிய அனுகூலம் ஏற்படும். மாணவர்களுக்கு செயல்திறமை  அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
பரிகாரம்: சரஸ்வதி வழிபாட்டால் வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டமம்:நவ. 24, 25
அதிர்ஷ்ட நாள்: டிச.4

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar