திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விடுமுறை தினம் என்பதால், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது வீதி உலா வரும் பஞ்சரதங்களில் ஒன்றான முருகர் தேர் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று நடைபெறவிருந்த சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.