கார்த்திகை அமாவாசை: போடி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2022 06:11
போடி: போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர்.
* போடி பழைய பஸ்ஸ்டாண்ட் கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச்சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், திருமலாபுரம் முத்து மாரியம்மன் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.