பதிவு செய்த நாள்
30
ஆக
2012
10:08
ஈரோடு: ஈரோடு கோட்டை, பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. ஈரோடு கோட்டை, ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் சிலவாரத்துக்கு முன் நிறைவடைந்தததால், ஆகஸ்ட், 26ம் தேதி காலை, 10 மணிக்கு கும்பாபிஷேக யாஹ பூஜை துவங்கியது. விக்னேஸ்வரர் பூஜை, மஹாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.ஆக., 27ம் தேதி ரண்டாம் கால யாக பூஜை, மங்களஇசை, விசேஷ சந்தி, பூதசுத்தி, கோபுர கலசங்கள் வைத்து பூஜித்தல், திரவ்யாகுதி நடந்தது. 28ம் தேதி நான்காம் கால யாகபூஜை, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, பூர்ணாகுதி, விநாயகர், பாலமுருகன், நவக்கிரஹங்கள், ஓங்காளியம்மன் பிரதிஷ்டை அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று, அதிகாலை, 5 மணிக்கு, ஆறாம் கால யாகபூஜை, விநாயகர் வழிபாடு, நாடிசந்தனம், ஸ்பர்ஷாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு நடந்தது. 6.30க்கு, கோபுரகலசம், ஓங்காளியம்மன், பரிவார தெய்வங்களுக்கும், கோபுர கலசங்களுக்கும், புனித நீர் தெளிக்கப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், மாநகரின் பல பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் நடந்தது. கோட்டை ஓங்காளியம்மன் கோவில் கமிட்டி தலைவர் ஆறுமுகம், செயலாளர் சிவஞானம், பொருளாளர் மலர்அங்கமுத்து, சம்பத்குமார், குப்புராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.