சிங்கம்புணரி: சிங்கம்புணரி வேங்கை பட்டி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. டிச. 8ம் தேதி மாலை 5:45 மணிக்கு முதல் கால யாகபூஜை தொடங்கியது. இரவு 8:00 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. 8:30 மணிக்கு மகாபிஷேகமும் 9:30 மணிக்கு 1008 சங்காபிஷேகமும் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.