Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் அறநிலையத் துறை அமைச்சர் ஆய்வு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்: குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்:  குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

24 டிச
2022
01:12

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம், விசேஷ அர்ச்சனை நடந்தது. இரவு 10.30மணிக்கு மாரியம்மன் அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.

கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரதீபமேற்றி அம்மனை வரவேற்றனர். தொடர்ந்து பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி, தாலாட்டு பாடல்களை பாடினர். இதில் வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணன், எஸ்.பி., ஸ்ரீநாதா, கலெக்டர் மோகன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த மாதம் 2 நாட்கள் அமாவாசை தொடர்ந்த நிலையில் 22ம் தேதி இரவே ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர். நேற்று கடும் பனிப்பொழிவும், குளிர் காற்றும் நிலவியது. இரவு 10 மணி வரை பக்தர்கள் கூட்டமும் குறைவாக இருந்தது. 10 மணிக்கு பிறகு திடீரென கூட்டம் மளமளவென குவிய துவங்கியது. இரவு 12 மணியளவில் பனியையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கோவில் வளாகம் முழுவதும் நிரம்பி வழிந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar