பதிவு செய்த நாள்
24
டிச
2022
05:12
திருச்சி: இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை இன்று (24.12.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஓதுவார் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 2 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப் குமார்.இ.ஆ.ப., அவர்கள், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம். பழனியாண்டி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை திருச்சிராப்பள்ளி மண்டல இணை ஆணையர் திரு. செல்வராஜ்,இணை ஆணையர்கள் திரு. மாரிமுத்து, திரு. சுதர்சன், திருமதி கல்யாணி, காவல் துணை ஆணையர் திரு.வி.அன்பு, உதவி ஆணையர் செல்வி. ஆர்.நிவேதா லட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள், இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.