Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாலாந்தூர் சொக்கத்தேவன்பட்டி ... காளஹஸ்தி சிவன் கோயிலில் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை காளஹஸ்தி சிவன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது

பதிவு செய்த நாள்

31 டிச
2022
06:12

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அடுத்த மாதம் 5 ம் தேதி, தேரும். 6-ம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழியில் ஆருத்ரா தரிசனம், ஆனியில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில் உள்ளே உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு. மந்திரங்கள் முழங்க உத்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சிதபாத தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். பின்னர் தீபாராதனை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து இன்று முதலே, பஞ்ச மூர்த்தி வீதியுலா துவங்கியது. நாளை வெள்ளி சந்திர பிரபை வாகன வீதியுலா, நாளை தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலாவும், 31-ம் தேதி பூத வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறுகிறது. ஜனவரி 1-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 2-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதியுலாவும், 3-ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது. ஜன.4-ம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதிஉலாவும் நடைபெற உள்ளது. அதனையடுத்து முக்கிய விழாவான தேர் திருவிழா ஜனவரி 5 ம் தேதி நடைபெற உள்ளது. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. தொடர்ந்து 6 ம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன், காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா சென்று வந்த பின் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும். ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெற உள்ளது. 7- ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவோடு உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர். உற்சவம் நடைபெறும் 10 நாட்களும், மாலை 5 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை அருகே ஆழியாறு அணை கரையில் உள்ள, ஆதாளி அம்மன் கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar