காளஹஸ்தி சிவன் கோயிலில் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2022 06:12
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று சனிக்கிழமையை யொட்டி கோயில் வளாகத்தில் உள்ள சனீஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சனீஸ்வர சாமி சன்னதியில் கலச பிரதிஷ்டை செய்ததோடு முன்னதாக கணபதி பூஜை, கலச பூஜைகளை கோயில் அர்ச்சகர்கள் நடத்தினர். இதனைத் தொடர்ந்து தீப தூபகளை சமர்ப்பித்து கற்பூர மகா தீபாரதனையை காண்பித்தனர். தொடர்ந்து சுவாமிக்கு நல்லெண்ணைய், விளக்கெண்ணெய், பால் ,தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர் மற்றும் கலசத்தில் இருந்த புனித நீரால் சனீஸ்வர ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது அபிஷேகத்தை தொடர்ந்து சனீஸ்வர சுவாமிக்கு பலவண்ண வாசனை மலர்களால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி மகா தீபாரதனை சமர்பித்தனர் . சனீஸ்வர அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வரசாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.