பதிவு செய்த நாள்
04
செப்
2012
11:09
சேலம்: சேலம், பூம்புகார் நிறுவனத்தில், விநாயகர் தரிசனம் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது. சேலம், திருவள்ளுவர் சிலை அருகே உள்ள பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை நிலையத்தில், விநாயகர் தரிசனம் கண்காட்சி மற்றும் விற்பனையை, சேலம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கோவிந்தராஜன் துவக்கி வைத்தார். பூம்புகார் மேலாளர் தியாகராஜன் கூறியதாவது:வரும், 19ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பூம்புகாரில், விநாயகர் தரிசன கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியுள்ளது. கண்காட்சியில், பஞ்சலோகத்திலான விநாயகர் சிலைகள், அலிகார் பித்தளை விநாயகர் சிலைகள், நூக்கமர சிலைகள், பேப்பர் கூழால் செய்யப்பட்ட சிலைகள், களிமண் சிலைகள், பளிங்கு மற்றும் சந்தன மர விநாயகர், ஜெய்ப்பூர் ஓவியம், மார்பிள் பவுடர் சிலைகள் என, பல்வேறு வகைகளில் சிலைகள் வந்துள்ளன. மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான விநாயகர் சிலைகள், விற்பனைக்கு உள்ளன. வரும், 19ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.