பதிவு செய்த நாள்
11
ஜன
2023
08:01
திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று செவ்வாய்க்கிழமை மற்றும் மார்கழி மாதத்தையொட்டி, தனுர் பூஜை நடந்தது.
அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் காலை 8:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. இதேபோல, திருத்தணி, அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில் மார்கழி மாதம், 26ம் நாளையொட்டி, அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நகரி, டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மன் கோவிலிலும், மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகள் நடந்தன. காலை முதல், மாலை வரை தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.