ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2023 03:01
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்ற பாசுரப்படி ஆண்டுதோறும் மார்கழி 27 ஆம் நாளன்று, ராமானுஜர் சார்பில் பெருமாளுக்கு அக்கார அடிசல் சமர்ப்பித்து ஆண்டாளின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையில் கூடாரவல்லி உற்ஸவம் நடப்பது வழக்கம். அதன்படி இன்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகளை பத்ரி பட்டர் செய்தார். பின்னர் 100 வெள்ளிக்கிண்ணங்களில் அக்கார அடிசல் சமர்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், தொழில் அதிபர் தனஞ்செயன், கோயில் அலுவலர்கள், பட்டர்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆண்டாள், பெரியாழ்வார் சாரிடபிள் டிரஸ்ட் தலைவர் முத்துப்பட்டர் செய்திருந்தார்.