விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விசாகப்பட்டித்திற்கு விஜய யாத்திரை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜன 2023 08:01
விசாகப்பட்டினம் சங்கர மடத்திற்கு ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் விஜய யாத்திரை சென்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
காஞ்சிபுரம், காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விசாகப்பட்டினம் சங்கர மடத்திற்கு விஜய யாத்திரை மேற்கொண்டுள்ளார். யாத்திரையில், நேற்று மடத்தில் தை பொங்கல் மற்றும் திருவாதிறை உற்சவம், நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவ பூஜை மற்றும் கோ பூஜையில் சுவாமிஜி பங்கேற்று, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து சுவாமிஜி பல்வேறு வழிபாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். ராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.