பதிவு செய்த நாள்
26
ஜன
2023
07:01
பழநி: பழநி, மலைக்கோயில் படிப்பாதை சன்னதிகள் உப தெய்வ சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழநி, மலைக்கோயில், படிப்பாதை கோயில்களுக்கு (ஜன.26) இன்று காலை 5:30 மணிக்கு படிப்பாதை பாத விநாயகர் கோவில் முதலான உப தெய்வங்களுக்கு நிறைவு வேள்வி திருக்குட ஞானத் திருவுலா நடைபெற்றது. காலை 9:50 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் கிரி வீதியில் உள்ள மயில்கள், பாத விநாயகர் கோயில், படிப்பாதையில் உள்ள சேத்ரபாலர், சண்டிகாதேவி, விநாயகர், இடும்பன், கடம்பன், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரிஸ்வரர், வள்ளிநாயகி, கும்மினி வேலாயுத சுவாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் உள்ளிட்ட உப தெய்வ சன்னதி கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கந்தபுராணம் திருப்புகழ் முற்றோதல் நடைபெற்று ஆறாம் வேள்வி பூஜைகளான ஐந்திருக்கை, ஐந்து சுற்று பூஜை, தீ வளர்த்தல், சுள்ளிகுண்ட பூஜை, உருவேற்றல், விதை, வேர், இலை, தண்டு, பூ, காய், கனி, கிழங்கு, திரவியங்கள், அறுசுவை சாதம், பலகாரம், சுண்டல், பாயாசம், பால், தயிர், தேன், நெய், சமித்து 96 ஆகுதி, வேள்வி பட்டாடை ஆகுதி நிறைவேள்வி நடைபெற்றது. வேள்விச்சாலையில் காலை 8:00 மணிக்கு ஆறாம் கால வேள்வி நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு நிறைவேள்வி நடைபெறும். மாலை 5:30 மணிக்கு ஏழாம் கால வேள்வி, இரவு 8:30 மணிக்கு நிறை வேள்வியும் நடைபெறும். நாளை மறுநாள் (ஜன. 27) மலைகோயில் மூலவர் சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். நேற்று (ஜன.25) நான்காம் கால வேள்வி காலை 9:00 மணிக்கு துவங்கியது. நிறைவேள்வி காலை 12: 45 மணிக்கு நடந்தது. ஐந்தாம் கால வேள்வி மாலை 5:30 மணிக்கு நிறைவேள்வி 8:30 மணிக்கும் நடைபெற்றது.