Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ... ஆதி செல்வ வலம்புரி விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொண்டிபாளையம் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மொண்டிபாளையம் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

28 ஜன
2023
03:01

அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

கோவை மாவட்டம், அன்னூர் அடுத்து மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில், மேலத்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி திருவிழாவில் பல லட்சம் பேர் பங்கேற்பர். இக்கோவில் தேர்த் திருவிழாவில் நேற்று இரவு நகர சோதனை மற்றும் வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று காலை பெருமாள் உள்ளிட்ட உற்சவர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து கருடாழ்வாருக்கு திருமஞ்சனம் நடந்தது. காலை 8:15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கோவிந்தா, கோவிந்தா என பக்தர்கள் பக்தி கரகோஷம் எழுப்பினர். இதையடுத்து வெங்கடேச பெருமாளுக்கு மகா தீபாராதனை நடந்தது. செயல் அலுவலர், பரம்பரை அறங்காவலர்கள் உள்பட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 31ம் தேதி வரை தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் திருவீதி உலா நடக்கிறது. பிப். 1ம் தேதி காலை 10:00 மணிக்கு, அம்மன் அழைத்தலும், திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. 2ம் தேதி இரவு யானை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நடக்கிறது. வரும் 3ம் தேதி காலை 5:30 மணிக்கு வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar