திருள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2023 03:01
காரைக்கால்: காரைக்காலில் சனிஸ்வரபகவான் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவரகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகும்போது சனிப்பெயர்ச்சி விழா மிகவிமரிசையாக நடைபெறுகிறது.
திருநள்ளாறு கோவிலில் வரும் 2023 டிசம்பர் மாதம் வாக்கிய பஞ்சாங்கம் படி மகரராசியில் இருந்து கும்பராசிக்கு இடம் பெயர்கிறது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி திருக்கணித பஞ்சாங்கபடி மகரராசியில் இருந்து கும்பராசிக்கு சனி பெயர்ச்சி நடைபெறுவதையொட்டி இன்று சனிக்கிழமை அதிகாலை முதலே ஸ்ரீசனீஸ்வரபகவானை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். முன்னதாக நளன்குளத்தில் குளித்துவிட்டு பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர். இதில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில் வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடம் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.