Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குற்றாலம் குற்றாலநாத சுவாமி ... லிங்கபைரவியில் தைப்பூச திருவிழா லிங்கபைரவியில் தைப்பூச திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் தெப்போற்ஸவம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் தெப்போற்ஸவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

07 பிப்
2023
11:02

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் தைப்பூச திருவிழாவில் நேற்று இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வெளித்தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்தனர். நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.


29ம் தேதி மதியம் நெல்லுக்கு வேலியிட்ட வைபவம், 4ம் தேதி நெல்லை கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் தீர்த்தவாரி நடந்தது. நேற்று முன்தினம் கோயிலில் உள்ள சவுந்தர சபா மண்டபத்தில் பிருங்கிரதமுனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் சவுந்தரசபா நடராஜர் திருநடனக்காட்சி நடந்தது. தெப்போற்ஸவத்தை முன்னிட்டு நேற்று மதியம் நெல்லை எஸ். என். ஹைரோட்டில் உள்ள வெளிதெப்பக்குள மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர். அங்கு ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதனையடுத்து நேற்று இரவு சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க தெப்ப மண்டபத்தை 9முறை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. தெப்போற்ஸவத்தில் கோயில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி, பேஸ்கர் முருகேசன் மற்றும் நெல்லை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை பழுது அடைந்த கியர்பாக்ஸ் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்கத்தில் நடைபெறும் புகழ்பெற்ற கங்காசாகர் மேளாவை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த மாநில அரசு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar