பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் வசதிக்கென ரூ.30 லட்ச மதிப்பில் புதிய ஆம்புலன்ஸ் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பழநி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலைப்பாதை, கூட்ட நெரிசலில் செல்லும் போது பக்தர்கள் சிலருக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. இதனை சரி செய்யவும், முதலுதவி அளிக்க மலைக்கோயில் வின்ச் ஸ்டேஷன், படிப்பாதை இடும்பன் கோயில், அருகே மருத்துவமனைகள் உள்ளன. உடல் நலக் கோளாறால் பாதிக்கப்படும் பக்தர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்க, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மலைக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் அவசர வாகனம் உள்ளது. இந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ், கோயில் நிர்வாகம் சார்பில், வாங்கி செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் மேம்படுத்தப்பட்ட தர சிகிச்சை அளிக்கக்கூடிய உபகரணங்கள், உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தபட உள்ளது.