கச்சத்தீவு திருவிழா : இன்று முதல் மார்ச் 4 வரை ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2023 06:03
ராமேஸ்வரம்: கச்சத்தீவு திருவிழா யொட்டி இன்று (மார்ச் 1) முதல் மார்ச் 4 வரை ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.
ராமேஸ்வரம் கிழக்கே பாக்ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சதீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா மார்ச் 3, 4 ல் நடக்கிறது. இவ்விழாவுக்கு மார்ச் 3 ல் ராமேஸ்வரத்தில் இருந்து 60 விசைப்படகு, 12 நாட்டுப்படகில் 2408 பக்தர்கள் செல்ல உள்ளனர். இந்த விழாவில் அன்னியர்கள் ஊடுவலை தடுக்கவும், பக்தர்கள் பாதுகாப்பாக சென்று திரும்பிட இன்று முதல் பாக்ஜலசந்தி கடலில் இந்திய, இலங்கை கடற்படையினர் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் மார்ச் 4 வரை மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்து, மீன்பிடிக்க செல்லும் அனுமதி டோக்கனை ரத்து செய்தனர். இதனால் நேற்று மீன்பிடித்து கரை திரும்பிய மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.