அன்னூர்: பசூர், பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா இன்று துவங்குகிறது. பசூரில் பழமையான பத்ரகாளியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்தி விநாயகர், பத்ரகாளியம்மன் மற்றும் மாகாளியம்மனுக்கு பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து கும்பாபிஷேக விழா இன்று காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. மாலையில் குப்பாயி அம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்வு நடக்கிறது. இரவு முதற்கால வேள்வி பூஜை நடக்கிறது. வரும் 2ம் தேதி காலையில், இரண்டாம் கால பூஜையும், விமான கோபுர கலசம் நிறுவுதலும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. வரும் 3ம் தேதி காலை 6 : 15 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கும், காலை 8:15 மணிக்கு பத்ரகாளி அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து மகா தீபாராதனை நடக்கிறது. கூனம்பட்டி ஆதீனம் சரவண மாணிக்கவாசக சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.