காளஹஸ்தி சிவன் கோயிலில் அருணாச்சலப் பிரதேஷ் டிஜிபி தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2023 03:03
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு இன்று அருணாச்சலப் பிரதேஷ் டிஜிபி சதீஷ் கோல்சா(sathish golcha)குடும்பத்தா ரோடு சாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்தவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர். கோவிலுக்குள் சென்றவர்கள் முன்னதாக சிறப்பு ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஈடுபட்டனர் .தொடர்ந்து ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்ததுடன் சாமி படத்தையும் கோயில் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.