மழை வேண்டி வருண பகவானுக்கு கூட்டாஞ்சோறு படைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2012 11:09
ராஜபாளையம்: மழை வேண்டி, வருணபகவானுக்கு கூட்டாஞ்சோறு படைத்து ராஜபாளையம் ஹவுசிங்போர்டில் பெண்கள் வழிபட்டனர்.சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள ஹவுசிங்போர்டில், நேற்று காலை வீட்டிற்கு வெளியே "காஸ் ஸ்டவ் வைத்து, பல காய்கறிகளுடன் பெண்கள் கூட்டாஞ்சோறு சமைத்தனர். விளக்கேற்றி, சுவாமி படங்கள் வைத்து, திருப்பல்லாண்டு பாடலுடன் திருப்பாவையை கமலம்அம்மாள் பாடினார். கவுன்சிலர் கவிதா, முன்னாள் கவுன்சிலர் பாண்டியம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர். பின், வேப்பமரத்தை சுற்றி, "வருணபகவானுக்கு ஜெய் என கோஷமிட்டு வழிபட்டனர். கமலம் அம்மாள், ""குடிநீர் தட்டுப்பாடு அதிகமாகி வருகிறது. ராஜபாளையம் நகரின் ஒரே குடிநீர் ஆதாரமாக மழை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் மட்டும் குடிநீராக கிடைக்கிறது. மற்ற குடிநீர் திட்டங்கள் இங்கு இல்லை. வருண பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினோம். கடந்த ஆண்டு நடத்தியபோது, மழை பெய்தது. அதுபோல இப்போதும் எதிர்பார்க்கிறோம், என்றார்.