Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு : வடபழனி ... வலம்புரி செல்வ விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் தீர்தக்குடம் ஊர்வலம் வலம்புரி செல்வ விநாயகர் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமிமலை முருகன் கோவிலில் 60 தமிழ் வருட படிகளில் பூஜை
எழுத்தின் அளவு:
சுவாமிமலை முருகன் கோவிலில் 60 தமிழ் வருட படிகளில் பூஜை

பதிவு செய்த நாள்

14 ஏப்
2023
11:04

தஞ்சாவூர் : தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோவிலில் திருப்படி பூஜை நடைபெற்றது. இதில், பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் 4-வது படைவீடாக திகழும் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில், தமிழ் வருட தேவதைகள், தங்களின் பெயர்களுடன் 60 படிகளாக அமர்ந்து, சுவாமிநாத சுவாமிக்கு சேவை செய்வது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். இக்கோவிலில், ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தமிழ் வருட தேவதைகள் பெயருடன் அமைந்துள்ள 60 படிகளுக்கு திருப்படி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி,  தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று திருப்படிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  இதில், ஸ்ரீசோபகிருது ஆண்டுக்குரிய படிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அப்போது, இந்த ஆண்டில் மழை வளம் வேண்டியும், வறட்சி நீங்கி தானிய விளைச்சல் பெருகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்நிகழ்வை முன்னிட்டு, அதிகாலை மூலவர் சுவாமிநாத சுவாமி நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், தங்கக் கவசம், வைரவேல் அலங்காரம் நடைபெற்றது. இதில்,  பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar