குருப்பெயர்ச்சி: பட்டமங்கலத்தில் ஏப். 16ல் சிறப்பு ஹோமம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2023 06:04
திருக்கோஷ்டியூர்: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஏப்.,16 ல் சிறப்பு ேஹாமம் நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் குருதலமாக பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலில் மும்மூர்த்திகளின் ஸ்வரூபமாக குருபகவான் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். குருப்பெயர்ச்சி ஏப்.22 ல் இரவு 11.29 மணிக்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு நடக்கிறது. அதை முன்னிட்டு இங்கு சிறப்பு வழிபாடு ஏப்.16 ல் நடைபெறுகிறது. ஏப்.16ல் காலை 8:30 மணிக்கு தட்சிணாமூர்த்தி மூலவருக்கு அபிேஷக, ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் துவங்கும். பின்னர் சிறப்பு ேஹாமம் பூர்த்தியாகி மதியம் 12:00 மணி அளவில் அபிேஷகம் நடந்து சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அருள்பாலிப்பார். பின்னர் மதியம் 1:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்து விபூதி வழங்கப்படுகிறது. ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர் அ.வீர.அ.வீரப்பச்செட்டியார் செய்கிறார்.