அன்னூர்: சித்திரை முதல் நாளை முன்னிட்டு இன்று அன்னூர் வட்டார கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
சித்தர்கள் வழிபாடு செய்த பழமையான சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில் இன்று காலை 8:30 மணிக்கு கோவில் அடிவாரத்தில் உள்ள தீர்த்தக்கிணற்றிலிருந்து பால்குடம், தீர்த்த குடம், பன்னீர் குடம் ஆகியவற்றுடன் ஊர்வலமாக புறப்பட்டு சன்னதிக்கு செல்கின்றனர். காலை 9:30 மணிக்கு பழனி ஆண்டவருக்கு, அபிஷேக பூஜையும், இதையடுத்து அலங்கார பூஜையும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இதே போல் பிள்ளையப்பம்பாளையம் செல்வ நாயகி அம்மன் கோவிலில் மதியம் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடைபெறுகிறது. அன்னூர் மாரியம்மன் கோவில், பெரிய அம்மன் கோவில் ஆகியவற்றில் இன்று சித்திரை முதல் நாள் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.