பதிவு செய்த நாள்
01
மே
2023
05:05
கோத்தகிரி: கோத்தகிரி பில்லிக்கம்பை கோவில்மேடு அருள்மிகு ஸ்ரீ சக்தி முனீஸ்வரர் கோவில், 67ம் ஆண்டு திருவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 30ம் தேதி நள்ளிரவு, 12:00 மணிக்கு, சக்தி அழைப்பு சிறப்பு பூஜை நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று காலை, 11:00 மணிக்கு, கங்கையில் இருந்து கரக ஊர்வலமும், பகல், 2:00 மணிக்கு, ஐயனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு, வான வேடிக்கை இடம் பெற்றது. இன்று, காலை, 10:00 மணிக்கு, பொங்கல் பூஜை, பகல், 12:00 மணிக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, தாரை தப்பட்டை கச்சேரி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு கரகம் கங்கையில் சேர்த்து, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நாளை சிறுவர்களுக்கான போட்டியும், வரும், 8ம் தேதி மறுப்பூஜையுடன் விழா நிறைவடைகிறது.