பதிவு செய்த நாள்
01
மே
2023
05:05
மதுரை: மதுரை, விருதுநகர் மாவட்ட போலீசாரின் குறை தீர் கூட்டம் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., சங்கர் தலைமையில் மதுரையில் நேற்று நடந்தது.
தென்மண்டல ஐ.ஜி., அஸ்ராகர்க், கமிஷனர் நரேந்திரன் நாயர், எஸ்.பி., சிவபிரசாத், விருதுநகர் எஸ்.பி., சீனிவாசபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தவிர பொதுமக்களிடம் இருந்து குடும்ப பிரச்னை, பணம் கொடுக்கல் வாங்கல், சொத்து பிரச்னை, திருட்டு குறித்து 246 மனுக்கள் பெறப்பட்டன. மனுதாரர், எதிர் மனுதாரர்களிடம் நேரடியாக விசாரித்து 171 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. ஏ.டி.ஜி.பி., கூறுகையில், சித்திரைத் திருவிழாவிற்கு 10 எஸ்.பி.,க்கள் தலைமையில் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் கஞ்சா வியாபாரிகளின் சொத்து, வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு வருகின்றன, என்றார்.