திருக்கடையூர் கோயிலில் செய்தித்துறை அமைச்சர் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2023 10:06
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்காரம் செய்ததால் அட்ட விரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இதனால் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தேவார பாடல் பெற்ற இக்கோவிலுக்கு வந்து ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபடுவது வழக்கம். இதகைய சிறப்புமிக்க கோவிலுக்கு நேற்று காலை தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் தனது குடும்பத்துடன் வந்தார் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அமைச்சர் சுவாமிநாதன் கோ பூஜை கஜ பூஜை செய்தார் பின்னர் அவர் அமிர்தகடேஸ்வரர் கால சம்ஹார மூர்த்தி அபிராமி அம்பாள் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார் பூஜைகளை கணேஷ் குருக்கள் தலைமையிலானோர் செய்து வைத்தனர் முன்னதாக அமைச்சர் சுவாமிநாதனை மயிலாடுதுறை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் செம்பனார்கோவில் மத்திய திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் செந்தில், யூனியன் துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெய மாலதி சிவராஜ் ஆகியோர் வரவேற்றனர். அமைச்சர் வருகையொட்டி பொறையார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து அமைச்சர் சுவாமிநாதன் தரங்கம்பாடி தாலுகா தில்லையாடியில் வள்ளியம்மை நினைவு மண்டப சீரமைப்பு பணிகளையும், மாயூரம் வேதநாயகம் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்பட உள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.