Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ... அண்ணாமலையாருக்கு அரோகரா..; திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது அண்ணாமலையாருக்கு அரோகரா..; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிறந்தது கார்த்திகை.. மாலை அணிந்து விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிறந்தது கார்த்திகை.. மாலை அணிந்து விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்

பதிவு செய்த நாள்

17 நவ
2023
07:11

மதுரை; கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து பெண்கள் தங்களது இல்லத்தின் வாசல்களில் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது உள்ளிட்ட பல்வேறு தெய்வ வழிபாடுகள் நடக்கும். இதேபோல் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1ம் தேதி அதிகாலையில் இஷ்ட தெய்வங்களை வணங்கி கோவில்களுக்கு சென்று குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். ஐயப்பன் கோவில்களுக்கு மாலை அணிந்து செல்பவர்கள் எல்லாம் நேற்று மாலைகள், காவி வேஷ்டிகள், பூஜை பொருட்களை எல்லாம் வீடுகளுக்கு வாங்கி சென்றனர். இன்று அவர்கள் காலையில் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று குருசாமி, கோவில் குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொண்டனர். கார்த்திகை மாதப்பிறப்பினை தொடர்ந்து காலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் மாலை அணிந்து விரதம் துவங்கினர். திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், வடபழநி முருகன் கோயில்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிய வந்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar