பதிவு செய்த நாள்
06
டிச
2023
04:12
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள மெய்ப்பொருள் நாயனார்க்கு குருபூஜை விழா நடந்தது.
நாயன்மார்கள் 63 வரில், விபூதியையும், சிவனடியாரையுமே சிவனாக கண்டு போற்றியவர் திருநீற்று செல்வர் என்று போற்றப்பட்டு திருக்கோவிலூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தவர் மெய்ப்பொருள் நாயனார். கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் சித்தி வளாகம் அமைந்துள்ளது. திருக்கோவிலூர் மெய்ப்பொருள் நாயனார் சித்தி வளாக வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 20 வது குருபூஜை விழா நடந்தது. செத்தவரை தர்ம பரிபாலன டிரஸ்ட் சுவாமிகள் சிவஜோதி மோன சித்தர் இடப்பக் கொடியை ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். மேலமங்கலம் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், திருவண்ணாமலை ஜீவா அம்மாள், புதுவை தணிகாசலம், எலந்தம்பட்டு அருணாச்சலம் ஐயா, விருத்தாசலம் 63 திருப்பணி மன்ற நிர்வாகி சங்கர், விழுப்புரம் சங்கர்ஜி முன்னிலை வகித்தனர். இட்டலிங்க ஆத்ம லிங்க மூர்த்தி களுக்கு, சிவனடியார்கள் அபிஷேக ஆராதனை, மலர் வழிபாடு, ஒலி வழிபாடுகளை செய்தனர். தொடர்ந்து மெய்ப்பொருள் நாயனர் மூலமூர்த்திக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.