அடாத மழையிலும் விடாமல் எரிந்த திருவண்ணாமலை மகா தீப தரிசனம்; இன்றுடன் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2023 01:12
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில், முக்கிய நிகழ்ச்சியாக கடந்த, 26ம் தேதி கார்த்திகை தீப திருவிழாவில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையிலும், மலை உச்சியில் 11 நாட்கள் தொடர்ந்து மகா தீபம் பக்தர்களுக்கு காட்சியளித்தது. இந்த மகா தீபம் இன்றுடன் நிறைவடைகிறது. நாளை (7ம் தேதி) காலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து கோயிலுக்கு கொண்டு வரப்படும். சிறப்பு பூஜைகளுக்கு பின் தீப கொப்பரை ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படுகிறது.