பதிவு செய்த நாள்
06
டிச
2023
05:12
மேட்டுப்பாளையம்: குறிஞ்சி நகரில் கால பைரவருக்கு, சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.
மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சியில், குறிஞ்சி நகர் உள்ளது. இந்த நகரில், குறிஞ்சீசுவரர் கோவிலில், முனியப்பன், முருகர், விநாயகர், கால பைரவர் ஆகிய சுவாமிகளின் சன்னதிகள் உள்ளன. இங்கு கால பைரவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, யாக வேள்வி பூஜைகள் நடந்தன. பைரவர் சுவாமி சிலைக்கு, வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்துப் சுவாமிக்கு அலங்காரம் செய்து, பூஜை செய்தனர். பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோன்று சிறுமுகை அருகே அன்னதாசம்பாளையம் மாதேஸ்வரர் கோவிலில் உள்ள, கால பைரவாஷ்டமிக்கு ஜெயந்தி விழா நடந்தது. சுவாமிக்கு ஹோம பூஜை, 18 வகை வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து ஸ்ரீ ருத்ர பாராயணம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.