முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்த குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2023 02:12
அவிநாசி; அவிநாசியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அவிநாசி ஒன்றியம், கருமபாளையம் ஊராட்சி, செம்பாகவுண்டன்பாளையம் பகுதி பட்டறை பஸ் ஸ்டாப்பில், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இதில் நாளை காலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்காக நேற்று அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இன்று ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், கலாகர்ஷணம், வாஸ்து சாந்தி ஆகியவற்றுடன் முதற் கால யாக வேள்வி பூஜை நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு செம்பாகவுண்டன் பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.