மானாமதுரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2023 03:12
மானாமதுரை; மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம் அமைந்துள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசித்தனர். மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம் அமைந்துள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்து 12 வருடங்கள் ஆனதை தொடர்ந்து தற்போது கும்பாபிஷேக விழாவிற்காக ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முடிவு பெற்று கும்பாபிஷேகத்திற்காக கடந்த 2 நாள்களுக்கு முன்பு யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி துவங்கி நடைபெற்று வந்தன. இன்று காலை யாகசாலை பூஜைகள் முடிவடைந்ததை தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று கோயிலை வலம் வந்து பின்னர் கோவில் கோபுரத்திற்கு கொண்டு சென்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர் இதனைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்ற பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மசாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.