ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம் பச்சை பரத்தலுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2023 07:12
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம், வேதபிரான் பெரியாழ்வார் திருமாளிகையில் ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருளி பச்சை பரத்தலை பார்வையிடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
நேற்று மாலை 4:15 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஆடிப்பூர பந்தலில் எழுந்தருளினர். அங்கு வேதபிரான் சுதர்சன் எதிர்கொண்டு வரவேற்று திருமாளிகைக்கு ஆண்டாள், ரெங்கமன்னாரை அழைத்து வந்தார். அங்கு அனைத்து வகை காய்கறிகள் கொண்டு பரப்பப்பட்ட பச்சை பரத்தலை பார்வையிட்ட ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் ராஜகோபுரம் வழியாக வடபத்ர சயனர் சன்னதி கோபால விலாச பகல்பத்து மண்டபத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகளுடன் பகல்பத்து உற்ஸவம் துவங்கியது. டிச.22 வரை நடக்கும் இவ்விழாவில் தினமும் காலையில் ஆண்டாள், ரெங்க மன்னார் கோபால விலாசத்தில் எழுந்தருள்கின்றனர். அங்கு அரையர் சேவை, திருவாராதனம், கோஷ்டி, பெரிய பெருமாள் பத்தி உலாவுதலும், பின்னர் மூலஸ்தானம் வந்தடைதலும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.