அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2023 04:12
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது.
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் 24வது ஆண்டு தேர் திருவிழாவில் நேற்று காலை சின்னம்மன், பெரிய அம்மன் கோவிலில் அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. இரவு கிராம சாந்தி நடந்தது. இன்று காலை 6:30 மணிக்கு கணபதி ஹோமம் துவங்கியது. இதைத் தொடர்ந்து காலை 9:20க்கு கொடியேற்றம் நடைபெற்றது. அருந்தவ செல்வி அம்மன் உடனமர் மன்னீஸ்வரர் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். கயிலை வாத்தியம் வாசிக்கப்பட்டது. புளியம்பட்டி அறுபத்து மூவர் அருட்பணி மன்றத்தினர் திருமறை வாசித்தனர். கட்டளைதாரர்கள், முன்னாள் அறங்காவலர்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். வரும் 23ம் தேதி வரை தினமும் மாலை 7:00 மணிக்கு வெவ்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடக்கிறது. வரும் 24ம் தேதி காலை 11:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.