பதிவு செய்த நாள்
26
அக்
2012
11:10
கும்பகோணம்: சுவாமிநாத சுவாமி கோவிலில் திருப்பணி விமான பாலாலய விழா வரும், 29ம் தேதி நடக்கிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள், நான்காவது படைவீடாக போற்றப்படும் சுவாமிமலை, ஸ்வாமிநாத ஸ்வாமி கோவிலில், கடந்த 2000மாவது ஆண்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம முறைப்படி, 12 ஆண்டுகளுக்கு, ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென்பதால், கோவில் விமான பாலாலயம் செய்யப்படுகிறது.இதையொட்டி, 28ம் தேதி காலை, 7.30 மணி முதல், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை போன்ற பூர்வாங்க வழிபாடுகள் செய்யப்படுகிறது. மறுநாள், 29ம் தேதி காலை, 5 மணி முதல், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது. பின்னர் விமான பிம்பம் பிரதிஷ்டையும் பாலாலயமும் செய்யப்படுகிறது. கோவில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.