Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கோவில் உற்சவம் யானைகள் ... பிரதோஷம்; சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு பிரதோஷம்; சிவன் கோயில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் கோட்டைக் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் கோட்டைக் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

21 பிப்
2024
05:02

திருப்புத்தூர்; திருப்புத்தூர் நகரின் காவல்தெய்வமான கோட்டைக்கருப்பண்ண சுவாமி கோயிலில் 17 ஆ்ண்டுகளுக்கு பின்னர் நடந்த கும்பாபிஷேகத்தை பக்தர்கள் திரளாகக் கூடி தரிசித்தனர்.

திருப்புத்தூர் நகரின்  பல நாற்றாண்டு புராதன கோட்டையின் கிழக்கு திசையில் பிரதான வாசலில் அமைந்துள்ளது கோட்டைக்கருப்பர் கோயில். இங்கு சேமக்குதிரைகள், உறங்காப்புளி மரம் இவற்றுடன்  விநாயகர், பாலமுருகன், கோட்டைக்கருப்பர், சங்கிலிக்கருப்பர், காளியம்மன்,ராக்காச்சி அம்மன்,பேச்சிஅம்மன், பரிவார தெய்வங்கள் அடங்கிய சன்னதிகள் உள்ளன. இக்கோயிலுக்கு 2007 ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது 17 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பணிகள் நடந்தது.  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் பிப். 18 ல் துவங்கியது. பெ.நமசிவாய சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சார்யர்களால் மூன்று நாட்களில் ஐந்து கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. யாகசாலை பூஜையில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார். இன்று காலை 6:00 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜை துவங்கி 9:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சிவாச்சார்யர்களால் கலசங்கள் புறப்பாடாகி  மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களின் 7 விமான கலசங்களை அடைந்தது. தொடர்ந்து மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் ஒலிக்க விமானங்களுக்கு காலை 9:50 மணிக்கு  யாகசாலை புனிதநீரால் கும்பாபிஷேகம் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலை வகித்தார். கும்பாபிஷேக புனித நீர் பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டது. பின்னர் விமான கலசங்களுக்கு தீபாராதனை நடந்தது.  தொடர்ந்து, மூலவர் கோட்டைக்கருப்பர், சங்கிலிக்கருப்பர்,காளியம்மன், ராக்காச்சியம்மன், பேச்சியம்மன், விநாயகர், பாலமுருகன் ஆகியோருக்கு மகா அபிஷேகம் நடந்தது.  நாட்டார், நகரத்தார்,திருப்புத்தூர் கிராமத்தினர்,குலதெய்வ வழிபடும் ஊரார், பரம்பரை பூசகர்கள் பங்கேற்றனர். கோயில் சார்ந்த கிராமங்களிலிருந்து பட்டு மரியாதையுடன் ஊர்வலமாக சாமியாடிகளுடன் வந்து பங்கேற்றனர். கோயிலைச்சுற்றிலும் பக்தர்கள் திரளாகக் கூடி கும்பாபிஷேகத்தை தரிசித்தனர். ஏற்பாட்டினை அறங்காவலர் எஸ்.வயிரவன் தலைமையில் துணைத் தலைவர்கள்  சித.வயி.லெட்சுமணன், அழ.சி.ராமசுவாமி, செயலாளர் மா.அண்ணாத்துரை, துணைச் செயலாளர்கள் பழ.சிவப்பிரகாசம், வெளியாரி மு.காசிநாதன், பொருளாளர் மீ.மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட திருப்பணிக்குழுவினர் செய்தனர்.  யாகசாலை துவங்கிய முதல் அன்னதானம் நடந்தது. கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், கருப்பர் புகழ் பாடல் வெளியீடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7.00 மணி முதல் 8.00 மணி.தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழியே ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலுக்கு வடக்கு பகுதியில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவிலில், சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான், தனி சன்னதியில் அருள்பாலித்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தியில் பாலராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டை முன்னிட்டு, ராமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar