பதிவு செய்த நாள்
27
பிப்
2024
11:02
கூடலூர்; கூடலூர், ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் தேர் திருவிழா சிறப்பாக நடந்தது.
கூடலூர் ஸ்ரீசக்தி விநாயகர் கோயில் 38ம் ஆண்டு தேர்த்திருவிழா 21ம் தேதி துங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை 5:00 மணி முதல் உத்திர நட்சத்திர வருஷாபிஷேகம், கும்ப பூஜை, யாக பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு மேளதாள வாக்கியங்கள், தாரை தப்பட்டை, செண்டை மேளம் வாத்தியங்களுடன், அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் மேல் கூடலூர் மாரியம்மன் கோயில், சுங்கம் முனீஸ்வரன் கோவில், எஸ்.எஸ்., நகர் நாகராஜா கோவில், துப்புகுட்டி பேட்டை சென்று கோவிலை வந்தடைந்து. இரவு சிறப்பு பூஜைகளுடன், விழா நிறைவு பெற்றது. விழாவை முன்னிட்டு, தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.