திருப்பரங்குன்றம் கோயிலில் மகா சிவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29பிப் 2024 04:02
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி, பாரிவேட்டை திருவிழாவிற்காக முகூர்த்தகால் நடப்பட்டு சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. காலையில் அபிஷேகம், பூஜை முடிந்து மூலவர்கள் அங்காள பரமேஸ்வரி, குருநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரமானது. பின்பு மூலவர்கள் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. நந்தி மண்டபத்தின் மேல் தர்ப்பைப்புல் கட்டி மாலை அணிவித்து தீபாராதனை நடந்தது. திருவிழா நடைபெறும் மார்ச் 12வரை தினமும் பூஜை நடக்கும். மார்ச் 6ல் கப்பரை பூஜையும், மார்ச் 8ல் சுப்ரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன், குருநாதசுவாமி கோயிலுக்கு புறப்பாடாகி அங்கு ஒரு வாரம் பூஜை, பாரிவேட்டை, பூப்பல்லக்கு முடிந்து அம்மன் மீண்டும் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொண்டு செல்லப்படுவார். கோயில் பூசாரிகள் பூஜை ஏற்பாடுகள் செய்கின்றனர்.