பதிவு செய்த நாள்
29
பிப்
2024
04:02
வாடிப்பட்டி; வாடிப்பட்டி அருகே வடுகபட்டி காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் கோயில் மற்றும் மகா கணபதி கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. சுவாமி,அம்மன் சன்னதி முன் யாகம் வளர்க்கப்பட்டு அணுக்னஞ, மகா கணபதி ஹோமம், பூஜைகள் நடந்தன. கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. சுவாமி, அம்மன், மகாகணபதி, பஞ்சமுக விநாயகர், பஞ்சமுக ஆஞ்சநேயர், குரு பகவான், சண்டிகேஸ்வரர், கால பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.