செந்துறை, செந்துறை அருகே கோட்டைப்பட்டி வீரமகாமுனி கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கடந்த மார்ச் 9. திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வாணவேடிக்கைகளுடன் சுவாமிக்கு ஏகவேஷ்டி அணியும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி தினமும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் திருவிழாவில் கிடாய்கள் வெட்டி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோட்டைப்பட்டி, வேப்பம்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.